அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து!

புதன் ஏப்ரல் 11, 2018

வட மேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவின் பவுபாரிக் விமானத்தளத்தில் இருந்து சுமார் 100 வீரர்களுடன் ராணுவ விமானம் இன்று புறப்பட்டுள்ளது. வடக்கு பகுதியில் உள்ள பெசார் என்ற நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்த விமானமானது நடுவானில் பறந்து கொண்டிருக்கும் போது திடீரென கீழே நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானது.

லயுஷின் இல் 76 என்ற பெயர் கொண்ட ரஷ்ய தயாரிப்பு விமானமான இதில் ராணுவ வீரர்கள் தவிர பயணிகளும் இருந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 100-க்கு மேற்பட்டவர்கள் பலியாகியிருக்கலாம் என அந்நாட்டு ரேடியோ அறிவித்துள்ளது.