அவுஸ்திரேலிய அரசாங்கம் திருப்பி அனுப்பிய இலங்கையரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Tuesday July 17, 2018

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா  சென்ற 18 இலங்கையரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்துள்ளது.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச்சென்ற 18 பேரையே அந்நாட்டு அரசாங்கம் தனி விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளது.

குறித்த 18 பேரும் இன்று காலை கடுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்நனர். அவர்களோடு அவுஸ்திரேலிய நாட்டு அதிகாரிகள் அடங்கிய 36 பேர் கொண்ட குழுவும் வருகை தந்துள்ளது. குறித்த 18 பேரையும் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் அவுஸ்திரேலிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.