அஸ்தி வியாபாரிகளும், வங்கிக் கொள்ளையர்களும்!

December 23, 2016

கடந்த 12.10.2016 அன்று தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனியும் வகையிலான செய்தி ஒன்றை பிரித்தானியாவின் பிரபல பத்திரிகைகளானThe Sun, Daily Mail ஆகிய நாளேடுகள் வெளியிட்டிருந்தன.

உலகத் தமிழர் வரலாற்று மையம் என்ற பெயரில் ஒக்ஸ்போர்ட்டில் மாட்டுப் பண்ணையை நடாத்தி வரும் தலைமைச் செயலகம் என்ற கும்பலின் அலுவலகப் பதிவு முகவரிக்கு உரியவரான ஸ்கந்தா என்றழைக்கப்படும் சுப்ரமணியம் ஸ்கந்ததேவா என்பவரின் மருமகனால் மேற்கொள்ளப்பட்ட வங்கிக் கொள்ளை பற்றிய செய்திதான் அது.

கிசோக் தேவராஜா என்ற இந்த நபர் பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர் இலண்டனில் கோடீசுவரர்கள் மட்டும் செல்லும் Grosvenor House ஐந்து நட்சத்திர விடுதியில் ஒரு இலட்சம் பவுண்கள் செலவில் ஸ்கந்தாவின் மகளான கிருத்திகா ஸ்கந்ததேவாவை திருமணம் செய்து கொண்டார்.

 

அங்கு பாட்டு, நடனம் எனப் பெரும் கொண்டாட்டமே நடைபெற்றது.

அவ்விடத்தில் திருமண கேக்கிற்கு மட்டும் 3,500 பவுண்கள் செலவிடப்பட்டிருந்தது.

Tesco எனப்படும் பல்பொருள் அங்காடியில் வருடாந்தம் 16,000 பவுண்களை மட்டும் சம்பளமாகப் பெற்று வந்த கிசோக் தேவராஜாவிற்கு ஆடம்பரமாகத் திருமணம் செய்வதற்கான ஒரு இலட்சம் பவுண்கள் பணம் எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்வி திருமணத்திற்கு சென்றிருந்த பலர் மத்தியில் அவ்வேளையில் எழுந்திருந்தது.

ஆனால் திருமணம் நடைபெற்ற சில மாதங்களில் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களில் பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட கருவிகளைப் பொருத்திப் பெரும் தொகையில் பணத்தைக் கொள்ளையிட்ட குற்றத்திற்காக கிசோக் தேவராஜா பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுபற்றி கிருத்திகாவின் தோழியான பெயர் குறிப்பிட விரும்பாத பெண் ஒருவர் த சண் பத்திரிகைக்கு கருத்துக் கூறுகையில், ஒரு சாதாரண பல்பொருள் அங்காடிப் பணியாளரான கிசோக் தேவராஜாவால் எவ்வாறு ஒரு இலட்சம் பவுண்கள் செலவில் அமெரிக்க நடிகர் George Clooney போன்று திருமணத்தை நடாத்த முடிந்தது என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தாகவும், இதைப்பற்றி பிரித்தானிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இது பழைய கதை.

இப்போதுள்ள கதை என்ன தெரியுமா?

தமிழீழ தேசியத் தலைவரின் பணிப்பிற்கு அமைய பாலா அண்ணையின் அஸ்தியை தான் பாதுகாத்து வந்ததாகவும், இப்பொழுது அதனை போராளிகளிடம் தான் கையளித்து விட்டதாகவும் வங்கிக் கொள்ளையரான கிசோக் தேவராஜாவின் மாமனாரான ஸ்கந்தா புரளி கிளப்பியுள்ளார்.

ஸ்கந்தா கிளப்பிய புரளி போதாதென்று, ஏதோ ஒரு கூஜாவில் தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் படத்தைப் பொறித்து, அதில் பாலா அண்ணையின் அஸ்தி வைக்கப்பட்டிருப்பதாக கூறி, மக்களிடம் பணம் வசூலிக்கும் அஸ்தி வியாபாரத்தில் தலைமைச் செயலகம் என்ற கும்பலம் அவசர அவசரமாக இறங்கியது.

எனினும் தனது கணவரின் அஸ்தி எவரிடமுமே இல்லை என்றும், அவரது அஸ்தி தன்னிடம் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே கையளிக்கப்பட்டு அதனைத் தனது கணவரின் விருப்பத்திற்கு இணங்கத் தான் உரிய முறையில் இயற்கையோடு சங்கமிக்க வைத்திருப்பதாகவும் கடந்த செவ்வாய்க்கிழமை திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள் வெளியிட்ட அறிக்கை இவர்களின் முகத்தில் கரியைப் பூசுவதாக அமைந்துள்ளது.

ஆக, வங்கிக் கொள்ளையர் கிசோக் தேவராஜா இப்போ சிறையில் வாட, ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணை அஸ்தி வியாபாரிகள் முகத்தில் கரிபூசிய நிலையில் வாடுகின்றனர் என்றுதான் கூற வேண்டும்.

- கிள்ளிவளவன்

https://www.thesun.co.uk/news/1964887/tesco-worker-on-16k-a-year-splashed-100k-on-his-wedding-just-weeks-before-being-jailed-for-cash-machine-scam/

http://www.dailymail.co.uk/news/article-3835802/Former-16-000-year-Tesco-checkout-worker-threw-lavish-100-00-wedding-lavish-London-hotel-weeks-jailed-ATM-scam.html

 

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

பிரான்சில் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2018 கடந்த 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செல் பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆர

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....

வியாழன் June 07, 2018

தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்