அ. சிவானந்தனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்!

January 07, 2018

திரு. அபலவாணர் சிவானந்தன் 03. சனவரி 2018 அன்று இலண்டனில் இறைவனடி எய்தியுள்ளார். திரு.அ. சிவானந்தன் அவர்களின் இழப்பு என்பது ஈழத்தமிழ் மக்களுக்கும் பல பிறமொழி இனத்தவருக்கும் ஏற்பட்டுள்ள இழப்பாகும்.

தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் பல தமிழ்ப் புத்திமான்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்தனர். போராட்ட காலங்களில் ஒருசிலர் சாதகமான ஆய்வுகளையும் வேறு சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து ஆய்வுக் கட்டுரைகளையும் அறிக்கைகளையும் வெளியிட்டனர். இவர்களில் தனித்துவமானவர் அம்பலவாணர் சிவானந்தன் அவர்கள். இடதுசாரிக் கொள்கையுடைய இவர் தமிழர்களது ஆயுதப்போராட்டத்தை முற்றுமுழுதாக ஆதாதரித்துப் பல கட்டுரைகள் எழுதியதோடு சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் எழுதுவதில் விற்பன்னராகத் திகழ்ந்துள்ளார். இலங்கையில் பிறந்த சிவானந்தன் அவர்கள் 1958 இனக் கலவரத்தை அடுத்து ஐக்கியராச்சியத்திற்குக் குடிபெயர்ந்து இன்றுவரை இலண்டனில் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலண்டனில் வசித்த காலங்களில் '' இன உணர்வுகளுக்கான கல்விநிலையம் '' எனும் கல்வி அறக்கட்டளையை நிறுவி அதன் இயக்குனராகப் பல காலமாகப் பணியாற்றியுள்ளார். எழுத்தாளராகப் பயணித்த இவர் பல புத்தகங்களையும் புதினங்களையும் சிறுகதைகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். வருடத்திற்கு இருமுறை ''இனமும் வகுப்பும்'' என்ற இதழையும் வெளியிட்டுள்ளார். இவர் ஏழுதிய முதலாவது புதினம் ''நினைவு இறக்கும்போது'' 1998 ஆம் ஆண்டு பொதுநலவாய எழுத்தாளர்களுக்கான பரிசைப் பெற்றது.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையால் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். அமரர் திரு.அ.சிவானந்தனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்.

- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

செய்திகள்
வியாழன் March 22, 2018

தமிழகத்தின் தமிழினப் பற்றாளர்களில் குறிப்பிடக்கூடியவரான திரு. மருதப்பன் நடராஜன் அவர்கள் உடல்நலக்குறைவினால் இன்று அதிகாலை காலமான செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியிருக்கின்றது.

செவ்வாய் March 20, 2018

50க்கும் மேற்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தமிழர் சார் பிரதிநிதிகளின் உரைகளைக் குழப்பியடித்துவருவதாக