ஆங் சான் சூகி - ரணில் சந்திப்பு!

May 14, 2017

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு மியன்மார் அரச தலைவியாக ஆங் சான் சூகிக்கும் இடையில் இன்று (14)  பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது. மியன்மாரின் ஜனநாயக ஆட்சியை உறுதிப்படுத்தவும் நாடாளுமன்றத்தை வலுப்படுத்தவும் சிறீலங்காவிடம்  உள்ள அனுபங்கள் வழியாக முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் ரணில்   இதன் போது உறுதியளித்துள்ளார்.

மேலும்  சிறீலங்காவின் நாடாளுமன்ற பிரதிநிதிகளை மியன்மாருக்கு அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். மியன்மாருக்கும் சிறீலங்காவுக்கும் இடையில் இருந்த வரலாற்று சிறப்புமிக்க உறவுகளை அடிப்படையாக கொண்டும், எதிர்காலத்தில் உறவுகளை வலுப்படுத்தவும் முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஆங் சான் சூகியை  சிறீலங்காவுக்கு விஜயம் செய்யுமாறும் பிரதமர் ரணில்  அழைப்பு விடுத்துள்ளார்.  சிறீலங்காவுக்கு வந்து கண்டி நகரை காண வேண்டும் என்ற ஆவலில் தானும் இருப்பதாக சூகி தெரிவித்துள்ளார்.

செய்திகள்