ஆசிரியர் செயலமர்வும் இலக்கியமாணி பட்டப் படிப்பிற்கான செயலமர்வும்

செவ்வாய் நவம்பர் 03, 2015

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின்; ஐக்கிய இராச்சியக் கிளையினால் நடாத்தப்பட்ட ஆசிரியர் செயலமர்வும் இலக்கியமாணி பட்டப் படிப்பிற்கான செயலமர்வும் 
31.10.2015 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு தொடங்கிய இச் செயலமர்வில் 81 பள்ளிகளைச் சேர்ந்த 500 ஆசிரியர்கள் பங்கு பற்றினார்கள்.

இச்செயலமர்வில் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் நூலாக்கத் தந்தை என அழைக்கக் கூடிய முனைவர் நா.சி; கமலநாதனும், தமிழ்நாட்டில் இருந்து பேராசிரியர் அறிவரசனும், தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் செயற்பாட்டாளர் திருமதி தங்கேசுவரி கெங்காதரன், திருமதி ரேணுகா முருகானந்தராசா, திரு தவராசா கிருஷ்;ணபிள்ளையும் திருமதி பானுமதி மணிக்கவாசகம் திருமதி கெங்காதேவி அன்ரன் லிட்வின் ஆகியோர் செயலமர்வின் பயிற்றுநர்களாகப் பங்கு பற்றினர். 


ஆசிரியர்களுக்கு தொடக்கக்கல்வி வகுப்புக்கான பயிற்சிகளும் கேட்டல் வாசித்தல் 


பேசுதல் அத்துடன் எழுதுதல் திறன்களை ஊக்குவிற்பதற்கான பயிற்சிகளும் மேலும் அடிப்படை இலக்கணம் தமிழ் இலக்கியம் வரலாறு என்பவற்றிக்கான விரிவுரைகளும் வழங்கப்பட்டன.  இந் நிகழ்வில் தமிழர் கல்வி மே;பாட்டுப் பேரவையின் பிரித்தானியாக் கிளையின் பொறுப்பாளர் திரு. முருகுப்பிள்ளை ஞானவேல் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் தலைமைச் செயலகப் பொறுப்பாளர் திருமதி நகுலா அரியறட்ணம் ஆகியோர் வளர்;தமிழ் நூல்களின் அகத்தியம் பற்றியும், தமிழ்மொழியின் தேவைபற்றியும் எடுத்துரைத்தார்கள். 


இங்கு முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் இந்த வளர்தமிழ் பாடநூல் கல்வித்திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் 81 பள்ளிகளும் 8000 மேற்பட்ட மாணவர்களும் பயிலுகின்றனா.;  மேலும் தமிழர்கல்வி மேம்பாட்டுப்பேரவையின் 12 ஆண்டுகளுக்கு மேலான கல்வித்திட்டம் வளர்தமிழ் பாடத்திட்டமாக உலகின் 14 நாடுகளிலுள்ள அறுபதாயிரத்திற்கு (60000) மேற்பட்ட எம் தமிழ்ச்சிறார்கள் பயின்று கொண்டிருக்கின்றார்கள் என்பதை குறிப்பிட்டாகவேண்டும்.