ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் தற்கொலை குண்டுத் தாக்குதல்

ஞாயிறு ஓகஸ்ட் 23, 2015

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுலில் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் குறைந்த பட்சம் 12 பேர் பலியாகினர். 

 

மேலும் 60க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.  வெளிநாட்டு இராணுவ தொடரணி ஒன்றை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் 3 பேர் அமெரிக்கர்கள் என்று நேட்டோ படையினர் உறுதி செய்துள்ளனர்.