ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு

January 08, 2017

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷபூர் ஷத்ரான் சென்ற வாகனம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் ஷபூர் உயிர்தப்பினார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷபூர் ஷத்ரான். 29 வயதாகும் இவர் அந்த அணிக்காக 39 ஒருநாள் மற்றும் 27 டி20 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடைசியாக அயர்லாந்து அணிக்கெதிராக கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி சர்வதேச போட்டியில் விளையாடி உள்ளார். தற்போதும் அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.

இவர் நேற்று நள்ளிரவு காபூலில் உள்ள பக்ராமி பகுதி அருகே தனது சகோதரருடன் வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது சில மர்ம நபர்கள் அவர் சென்ற கார் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் பல குண்டுகள் அவரது காரை தாக்கினார்.

ஆனால் ஷபூர் அதிர்ஷ்டவசமாக இச்சம்பவத்தில் இருந்து காயமின்றி உயிர்தப்பினார். துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டனர். கிரிக்கெட் வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷபூர் மீது தாக்குதல் நடத்தியதற்கு எந்த குழுவோ அல்லது தனி நபரோ பொறுபேற்கவில்லை. ஷபூர் ஷத்ரான் மீது ஏற்கனவே இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன என்று கூறப்படுகிறது.

செய்திகள்
புதன் March 22, 2017

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் சமர்ப்பித்த அறிக்கை மீது தற்போது விவாதம் இடம்பெற்று வருகிறது.