ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2018 யேர்மனி!

May 29, 2018

27.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனியில் சுவெற்ற என்னும் நகரத்தில் சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவனமும், யேர்மனியில் அமைந்துள்ள மேஜர் பாரதி தமிழ்க்கலைக்கூடம் ஆகிய இருநிறுவனங்களும் இணைந்து நடாத்திய பரதக்கலைக்கான ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இத்தேர்வில் நடன ஆசிரியை திருமதி.சாவித்திரி இமானுவேல் அவர்களின் மாணவிகளான செல்வி.கார்த்திகா சிவபாலன் மற்றும் செல்வி.கஐhனா புண்ணியமூர்த்தி அவர்களும்.

நடன ஆசிரியை திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார் அவர்களின் மாணவி செல்வி.சதுர்யா தவயோகராஐh அவர்களும் நடன ஆசிரியை திருமதி. றெஐினி சத்தியகுமார் அவர்களின் மாணவர்கள் செல்வி.தீபனா சத்தியகுமார் செல்வன். சத்தியகுமார் நிமலன் அவர்களும் நடன ஆசிரியை திருமதி. துஷ்யந்தி ஜெகதீஸ்வரன் அவர்களின் மாணவி செல்வி.நிறோசி லக்வின்டர்சிங். அவர்களும் மிகச்சிறப்பாக தங்கள் ஆற்றுகையை வெளிப்படுத்தினார்கள்.

சுவிசில் இருந்து வருகைதந்த அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் தேர்வுப்பொறுப்பாளர் நாகராஜா விஐயகுமார் உரைநிகழ்த்தும் போது இன்று ஆற்றுகைத்தரத்திற்கு தோற்றுகின்ற மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் இம் மாணவர்களை உருவாக்கிய கலை ஆசிரியர்கள் மற்றும் முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். 

அனைத்துலகத் தழிழ்க்கலை நிறுவகம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுதான் ஆண் மாணவன் ஒருவர் ஆற்றுகைவெளிப்பாட்டுத்தேர்விற்கு முதல் தடவையாக தோற்றுவது சிறப்பான விடயம் எனவும் ஆற்றுகைத்தரத்திற்கு தோற்றிய, தோற்றுகின்ற மாணவர்கள் சக மாணவர்களின் ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்விற்கு நட்டுவாங்கம் செய்யும் ஆளுமையினையும் மனத்தைரியத்தினையும் பாராட்டுவதாகவும் பக்கவாத்தியக் கலைஞர்கள் மிகச்சிறப்பாக தங்கள் பங்களிப்புக்களை வழங்கியிருப்பதாகவும்  தெரிவித்தார். 

தமிழ் இனத்தின் விடுதலைக்காக போராடுகின்ற தமிழ்த் தேசியத்தினால் புலம்பெயர்நாடுகளில் தமிழ் இனத்தின் அடையாளமாக கருதப்படுகின்ற மொழி மற்றும் கலை கலாச்சார விழுமியங்களை பாதுகாப்பதற்காகதான்; அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம் உருவாக்கப்பட்டது எனவும் இந் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக நாடுகள் நிலையில் பணியாற்றிக்கொண்டிருக்கின்ற தேசிய செயற்பாட்டாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்திருந்தார் .

ஆற்றுகைத்தரத்தினை நிறைவுசெய்திருக்கின்ற மாணவர்கள் அந்தந்த நாடுகளிலேயே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினூடாக பட்டப்படிப்புக்களை மேற்கொள்வதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அதன் அடிப்படையில் இம் மாணவர்கள் கலைக்கான பட்டப்படிப்புக்களையும் நிறைவுசெய்யவேண்டுமென கேட்டுக்கொண்டதுடன் ஆற்றுகைத்தரத்தினை நிறைவுசெய்த மாணவர்கள்அனைத்துலகத் தமிழ்க்கலை தேர்வுகளில் தேர்வுநடுவர்களாக கடமையாற்றுவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....