ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி !

திங்கள் ஜூன் 25, 2018

ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கை தமிழ் குடும்பத்தை நீண்ட காலத் அங்கேயே தங்குவதற்கான அனுமதியை அந்தநாட்டு பெடரல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

 பிரியா, அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட குடும்பத்தை நாடு கடத்துவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

 கடந்த வெள்ளிக்கிழமை நாடு கடத்தலை எதிர்த்து செய்யப்பட்ட மனு நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது.  அதற்கமைய இந்த குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியே வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எனினும், நிராகரிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு பெடரல் நீதிமன்றத்தால் 21 நாள்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

 எனினும், நீதிமன்றத்தின் கடந்த வாரம் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்து வழக்கு விசாரிக்க நீண்ட காலம் செல்லும் என்பதனால், குறித்த தமிழ் குடும்பம் நீண்ட காலம். ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.