ஆஸ்திரேலியாவுக்க படகு வழியாக செல்ல முயன்ற 489 கைதுகள்!

வெள்ளி நவம்பர் 16, 2018

கடந்த ஓராண்டில் பல்வேறு நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஆஸ்திரேலிய  உள்துறையிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், கடந்த 2013ல் முதல் நடைமுறையில் உள்ள கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையின் கீழ் படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயன்றவர்களை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட 78 நடவடிக்கைகளில் 2,525 தஞ்சக்கோரிக்கையாளர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். 

இந்த ஆண்டு தொடங்கியது முதல் ஆகஸ்ட் மாதம் வரை எடுக்கப்பட்ட 10 நடவடிக்கைகளில் 297 பேர் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த படகுப்பயண முயற்சிகள் இலங்கை, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து முயற்சிக்கப்பட்டுள்ளது. 

அதே போல், கடந்த செப்டம்பர் 2013 முதல் இவ்விவகாரத்தில் 614 பேர் கைதாகியுள்ள்னர். அதில் முதன்மையாக இலங்கையில் 489 கைதுகளும், இந்தோனேசியாவில் 66 கைதுகளும், மலேசியாவில் 48 கைதுகளும் நடந்துள்ளன. இந்தியாவிலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

2013 ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்புக் கொள்கைகளை  நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியே ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய முயற்சிப்பவர்களை முழுமையாக நிராகரித்து 

வருகின்றது. கடந்த காலங்களில், இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா அடையும் முயற்சிகளை ஈழத்தமிழ் அகதிகள் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.