ஆஸ்திரேலியா சென்ற இலங்கையின் தஞ்சக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்

Tuesday February 23, 2016

ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியே நுழைவதற்கு அந்நாட்டு அரசு கடுமையான விதிகளை கையாண்டாலும் தஞ்சக் கோரிக்கை கோரி அங்கு மக்கள் சென்று கொண்டு தான் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இலங்கையிலிருந்து படகு வழியே சென்றவர்கள் திருப்பி அனுப்பப்படுவதாக தெரிவித்துள்ளார் குடிவரவு துறை அமைச்சர் பீட்டர் டட்டன்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,’இப்படகில் வந்தவர்கள் யாரும் அகதிகள் இல்லை. அதனால் எங்கிருந்து வந்தார்களோ அங்கேயே அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். இலங்கையுடன் ஆஸ்திரேலியா நல்லுறவினை பேணுகிறது. படகுகள் வருகை குறித்து செய்தி வராமை என்பது கடல் வழியிலான பிரச்னை தீர்ந்துவிட்டதாக அரத்தமில்லை. பலர் ஐரோப்பியாவில் இப்படி குடியேற நினைத்தாலும் முடியவில்லை. ஆஸ்திரேலியாவில் நுழைய மலேசியாவை அடைந்து இந்தோனேசியா மூலம் படகில் வரலாம் என நினைக்கிறார்கள். 14,000 பேர் இப்படி ஆஸ்திரேலியா வர காத்து கிடக்கின்றனர்’ என குறிப்பிட்டதோடு ஆட்கடத்தல்காரர்களை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கடுமையாக எச்சரித்தும் உள்ளார்.