இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மேலும் இருவரை மீட்க நடவடிக்கை

May 19, 2017

வெள்ளவத்தையில் சரிந்து வீழ்ந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள மேலும் இரண்டு பேரை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களில் ஒருவர் சம்பத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பத் என்ற நபருடன் பொலிஸார் தொடர்ந்தும் தொடர்புகளை ஏற்படுத்தி அவரை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

தனக்கு காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  இடிபாடுகளுக்குள் சிக்குண்டுள்ள நபரை ஊக்குவித்து அவரை வெளியில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.  இதுதவிர பிறிதொருவரும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செய்திகள்
வெள்ளி செப்டம்பர் 22, 2017

வஸ்கமுவ தேசிய வனாந்தர, வனஜீவராசிகள் காரியாலயத்தின், ஆயுத அறையை, இனந்தெரியாத நபர்கள் உடைத்து