இது நரக பூமி!

April 03, 2018

ஈழத்திலே!
பார்வதிகளும்
கணபதிகளும்
கொன்றழிக்கப்பட்டபோது
அந்த பரமசிவனும் வரவில்லை!

பாஞ்சாலிகளின்
துகிலுரிக்கப்பட்டபோதும் உடன் காத்திட
அந்த பரமகிருஸ்ணரும் கருணை காட்டவில்லை!

மரியாக்களும்
பிலிப்புகளும்
பட்டினியால் மடிந்தபோதும்
அந்த இயேசு பிரானும் இரக்கம் காட்டவில்லை!

கொடூரன் மகிந்தன்
கொலை வெறித்தாண்டவம் ஆடிய போதும்
அந்த புத்த பிரானும் தடுத்திட வரவில்லை!

சிரியாவிலே!
பாத்திமாக்களும்
முகம்மதுக்களும்
கொன்றழிக்கப்பட்டுகொண்டிருக்கும்போதும்
அந்த நபி பெருமானாரும் வருவதாயில்லை!

கடவுளும்
வரவே அஞ்சும்
இது நரக பூமியோ!

அநியாயத்தின் துணை கொண்டு
அழிக்கப்படும் மானுடமே
நீங்கள் இறக்குமுன்னே-
இந்த நரக பூமி
அழிந்து போகட்டும் என்றே
பலமுறை சாபமிட்டே விடை பெறுவீரோ!

புணர்ந்து
பல்கி பெருகி
தனை தானே கொன்று தின்று
அழிந்துபோம்
இதயம் இறந்த இந்த மானுடம்
இது நரக பூமி
இக்கலியுகத்தில்……………………..

-ஈழன்-

செய்திகள்
செவ்வாய் யூலை 17, 2018

தமிழி எழுத்துரு வரைய சந்தர்ப்பம் கிடைத்து வெளியிட்டோம். இதில் என் பங்கு வரைபட உதவி மட்டுமே.

ஞாயிறு யூலை 01, 2018

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் பதிவு செய்திருக்கும் புதிய தொழில்நுட்பத்திற்கான காப்புரிமை விவரங்கள் அனைவரையும் பதற வைக்கிறது.