இத்தாலி சொல்லுக்கு உறுதி நிகழ்வு

திங்கள் பெப்ரவரி 22, 2016

Reggio Emilia நகரில் 21-02-2016 அன்று உலகத்  தாய் மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி சொல்லுக்கு உறுதி போட்டி நிகழ்ச்சி நடாத்தியது.
இப்போட்டியில் பல சிறுவர்கள் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் சிந்தனையும் மற்றும் திருவள்ளுவரின் குறள்களையும் மனப்பாடம் செய்து நடுவர்கள் முன் கூறினார்கள். 

தமிழ் இலக்கியத்தின் அறநூல்களில் ஒன்றான திருக்குறளையும் எமது தேசியத்தலைவரின் சிந்தனைகளையும் எமது சிறுவர்கள் அறிந்து அவற்றினை தமது வாழ்க்கைக்கு வழிகாட்டிகளாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே இப் போட்டியினை தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி நடாத்தியது.
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்று சொல்வர், அதுபோல் திருக்குறளும் தேசியத் தலைவரின் சிந்தனைகளும் சொல்லுக்கும் வாழ்க்கைக்கும் உறுதியாக அமைய வேண்டும்.

போட்டியில் வெற்றிபெற்ற பிள்ளைகளின் விபரங்கள்:

முதலாம் பிரிவு:
முதலாம் இடம் : சதீஸ் லக்ஷனா 
இரண்டாம் இடம்: ராஜேஸ்கண்ணா ஸ்ரேன் 
மூன்றாம் இடம்: ரமணன் சியானா 

இரண்டாம் பிரிவு:
முதலாம் இடம் : சுதாகரன் அஸ்விதா  
இரண்டாம் இடம்: அற்புதனாதன் ரேணுகா 
மூன்றாம் இடம்: டிக்சன் அபின்சன் 

மூன்றாம் பிரிவு:
முதலாம் இடம் : அற்புதநாதன் மதுரா  
இரண்டாம் இடம்: அசோகரத்தினம் அட்சயா 
மூன்றாம் இடம்: இராசையா அபர்ணியா