இத்தாலி பல்லின மக்கள் நிகழ்வில் தமிழீழத் தேசிய அடையாளம்

June 07, 2017

இத்தாலி பொலோணியா நகரில் 04.06.2017 அன்று பல்லின மக்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில் தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலி தமிழின அழிப்பும் தமிழீழத் தேசிய விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தன்மையையும் வெளிப்படுத்தினார்கள்!

நிகழ்வில் பல்லின மக்களும் இத்தாலிய மக்களும் கலந்துகொண்டார்கள். அனைவரும் எம் இனத்துக்கு நிகழ்ந்த இனப்படுகொலையை ஆர்வத்தோடு அறிந்து கொண்டார்கள். 

தமிழ் இளையோர் அமைப்பு உறுப்பினர்கள் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் ஓவியக் கண்காட்சிகளுடன் ஈழத்தின் தற்போதைய நிலைமையை விளக்கினார்கள்.  பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கும் நமது அடையாளம், இனவழிப்பு தொடர்பான விடயங்கள் கொண்டுசேர்க்கப்பட்டன.

தமிழ் இளையோர் அமைப்பு இத்தாலியுடன் எதிர்காலங்களில் இணைந்து செயற்பட இச்சந்தர்ப்பத்தில் பல அமைப்புகள் முன் வந்தனர்.

செய்திகள்
திங்கள் June 19, 2017

ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கம், ஏவ்றி தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று முன்தினம் (17.06.2017) சனிக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஏவ்றி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாக