இந்தியச் சிறையில் உள்ள ஈழத் தமிழர் ஒருவர் மனைவியுடன் இணைந்து தற்கொலை முயற்சி

Monday August 03, 2015

இந்தியாவின் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர் ஒருவரும் அவரது மனைவியும் சிறைக்கூண்டுக்குள் தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு திருச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

 

ஈழத்தைச் சேர்ந்த தங்கவேலு மகேஸ்வரன் அவரது மனைவியான திருசாந்தி ஆகியோரே தற்கொலைக்கு முயன்றவர்களாவர். 

 

தங்;கவேலு மகேஸ்வரன் கடந்த மூன்று வருடங்களாக திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவரை விடுதலை செய்யுமாறு இந்திய உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தபோதும் தொடர்ந்து அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையால் மனம் உடைந்த நிலையில் இருந்துள்ளார். 

 

இந்த நிலையில் இன்று திங்கட்கிழமை அவரது மனைவி அவரைப் பார்ப்பதற்காக சிறைக்குச் சென்றார். அங்கு இருவரும் அதிக மருந்து வில்லைகளை உட்கொண்டனர். இவர்கள் மயக்கமடைந்த நிலையில் இருந்ததைக் கண்ட சிறைக்காவலர்கள் பொலிஸாரின் உதவியுடன் இவர்களை மீண்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இவர்கள் இருவரும் தொடர்ந்தும் மயக்க நிலையில் இருந்துவருவதாக வைத்தியசாலைத் தரப்பு தெரிவித்துள்ளது.