இந்தியாவின் முதல் பெண் புகைப்பட கலைஞர் பிறந்த தினம்!

December 09, 2017

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட பத்திரிகையாளரான ஹோமை வியாரவல்லா பிறந்த நாளையொட்டி கூகுள் டூடுல் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

ஹோமை வியாரவல்லா குஜராத்திலுள்ள நவ்சாரி பகுதியில், 1912ம் ஆண்டு டிசம்பர் 9-தேதி பார்சி குடும்பத்தில் பிறந்தார். அதன் பிறகு மும்பையிலுள்ள சேவியர் பல்கலைகழகத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்தார்.

கணவர் மானக்‌ஷா மூலம்தான் புகைப்படத்துறை ஹோமைக்கு அறிமுகமாகியுள்ளது. 1942ம் வருடம் டெல்லிக்கு குடி பெயர்ந்த இவர் பிரிட்டிஷ் இன்ஃபர்மேஷன் சர்வீசஸில் பணிபுரிந்தார்.

இந்தக் காலக்கட்டங்களில் மகாத்மா காந்தி, நேரு ஆகியோரின் பிரபலமான புகைப்படங்களை எடுத்தார் ஹோமை. ஒரு நல்ல புகைப்படம் என்பது காலம், கோணம், ஒருங்கமைப்பு ஆகியவற்றை பொறுத்து அமையும் என்பதில் ஹோமை நம்பிக்கை கொண்டிருந்தார்.

தி இந்து (ஆங்கிலம்) அளித்த நேர்காணல் ஒன்றில் ஹோமை பேசும்போது, "ஒரே நேரத்தில் ஒரு புகைப்படத்தை எடுக்க 15 பேர் உள்ளனர். அனைவருக்கும் புகைப்படம் எடுப்பதில் தனித்தனியான பாணி இருக்கும். ஆனால் அவர்களில் ஒருவரே சரியான நிகழ்வை சரியான கோணத்தில் எடுப்பார்" என்றார்.

ஹோமை வியாரவல்லா பணியைப் பாராட்டி இந்திய அரசு பத்ம விபூஷண் விருது வழங்கி சிறப்பித்துள்ளது. இவ்வாறு புகைப்படத் துறையில் பெண்கள் பலருக்கும் முன்னோடியாக விளங்கிய ஹோமை வியாரல்லா 2012-ம் ஆண்டு மரணம் அடைந்தார்.

செய்திகள்
ஞாயிறு January 14, 2018

தமிழக மக்களுக்கும், உலகுவாழ் தமிழர்களுக்கும் தைத் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள்...