இந்தியாவிலும் விடுதலைப்புலிகளுக்கு தடையை நீக்க வேண்டும்: தீபா

யூலை 29, 2017

ஐரோப்பிய ஓன்றியத்தின் உயர்நீதி மன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளதால் இந்தியாவிலும் விடுதலைப்புலிகளுக்கு தடையை நீக்க வேண்டும் என தீபா அணி கோரிக்கை விடுத்துள்ளது.

அ.தி.மு.க. ஜெ.தீபா அணி தலைமை செய்தி தொடர்பாளர் பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஐரோப்பிய ஓன்றியத்தின் உயர்நீதி மன்றமே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளதால் உலக தமிழினமே மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்த தடை நீக்கம் என்பது ஈழத் தமிழர்களின் உண்மையான உரிமை போராட்டத்திற்க்கு கிடைத்த அங்கீகாரமாகும். எனவே இந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்.

தமிழக சிறையில் வாடுகிற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். ஈழத்தமிழர்களின் இன்னல் தீர்ந்திட பல்வேறு கோரிக்கைகளை சட்ட மன்றத்தில் நிறை வேற்றிய புரட்சித்தலைவி வழியில் அ.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் ஜெ.தீபா ஈழத்தமிழர்கள் விரும்பும் நிரந்திரமான அரசியல் தீர்வு வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்திகள்
வெள்ளி யூலை 20, 2018

மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். 

 

புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!