இந்தியா சென்றடைந்தார் மைத்திரி!

Saturday March 10, 2018

இந்தியாவில் புதுடில்லி நகரத்தில் நாளை 11 ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் ஆரம்ப நிகழ்வில் பங்குபற்றுவதற்காக இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (10) பிற்பகல் புதுடில்லி இந்திராகாந்தி விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சின் மேற்கு பிராந்தியத்துக்குப் பொறுப்பான செயலாளர் திருமதி ருச்சிகன் ஷாம், விமான நிலையத்தில் வைத்து ஜனாதிபதியை வரவேற்றார்.

சிறிலங்காவிற்கான  இந்தியத் தூதுவர் தரங்ஜித் சிங் மற்றும் இந்தியாவுக்கான சிறிலங்காத் தூதுவர் திருமதி சித்ராங்கனி வாகீஸ்வர ஆகியோர் இந்நிகழ்வில் இணைந்துகொண்டனர்.

ஜனாதிபதி தங்கியுள்ள தாஜ் ஹோட்டலில் தூதரக அதிகாரிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.  ஜனாதிபதியின் இந்த இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் இணைந்துள்ளார்.