இந்திய - சிறிலங்கா காவல் துறை கூட்டுப் பயிற்சி!

Thursday September 13, 2018

இந்தியாவின், பரிதாபாத்தில் சிறிலங்கா மற்றும் இந்திய காவல் துறை  இணைந்து போக்குவரத்து முகாமைத்துவ கூட்டுப் பயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய நிதியுதவியுடன் கடந்த 03 ஆம் திகதி ஆரம்பமான இந்த பயிற்சி நெறியானது நாளை 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

இந்த பயிற்சி நெறியில் பிரதானகாவல் துறை  பரிசோதகர், காவல் துறை  பரிசோதகர், உதவிப் காவல் துறை  பரிசோதகர் மற்றும் காவல் துறை  சார்ஜன்ட் ஆகிய தரங்களிலிருந்து 15 காவல் துறை  அதிகாரிகள் பங்கு பற்றுகின்றனர்.

மேலும் இந்த வருடம்  சிறிலங்கா  காவல் துறை  இந்தியாவில், குற்றச் சம்பவ இடர் முகாமைத்துவம் மற்றும் பகுப்பாய்வு, நீதிமன்றில் குற்றவியல் விளக்கங்களில் நிபுணத்துவ சாட்சியமளித்தல், தடயவியல் விஞ்ஞானம், சைபர் தடயவியல் மற்றும் நிதிசார் குற்றம் தொடர்பான ஒரு கருத்தரங்கு போன்ற ஏனைய பல்வேறு பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.