இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெள்ளி செப்டம்பர் 25, 2015

இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தோனேஷியாவின் வட மேற்கில் உள்ள சோரங் பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில், 64 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

 

நிலநடுக்கம் 6.9 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  மேலும் கடந்த வாரம் சிலியில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் 13 பேர் பலியானதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.