இன்ரபோல் தலைவர் மெங் ஹாங்வே மாயம்!

Friday October 05, 2018

இன்ரபோல் தலைவர் மெங் ஹாங்வே சீனாவுக்கு சென்றபோது மாயமானார். இதனால் சீனாவின் மீது சந்தேகம் எழுந்து உள்ளது. பிரான்சை தலைமையிடமாக கொண்டு  இன்ரபோல்  எனப்படும்  சர்வதேச குற்ற நடவடிக்கைகள் தடுப்பு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக மெங் ஹாங்வே  இருந்து வந்தார். 

இந்நிலையில், இன்ரபோல் தலைவர் மெங்க் ஹாங்வேயை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தனது கணவரை செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை என அவர் அளித்த புகார் தொடர்பாக காவல் துறை  விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் லியான்ஸ் நகரில் மெங்க் ஹாங்வே வசித்து வந்துள்ளார். அவர் சீனாவை சேர்ந்தவர். சீனாவில் பாதுகாப்புக்கான துணை அமைச்சராகவும் செயல்பட்டு வந்துள்ளார். மெங்க் ஹாங்வே செப்டம்பர் 29ம் திகதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சீனாவுக்கு பயணம் மேற்கொண்டது முதல் அவரை காணவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. சீன அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக அவர் மீது ஏற்கனவே புகார்கள் இருந்து வந்துள்ளது.