இன்று இரவு நாடாளுமன்றம் கலைக்கப்படும்!

Friday November 09, 2018

இன்றிரவு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சற்று முன்னர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

”அரச அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அமைச்சர்கள் நியமனம் செய்தபின், 113 உறுப்பினர்கள் இல்லாத நிலையில், இன்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்கவுள்ளார்.

ஜனாதிபதி அப்படி செய்தால், நம் நாட்டின் உத்தியோகபூர்வ பெயரில் உள்ள “ஜனநாயகம்” என்ற வார்த்தையை அகற்றலாம்.” என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.