இன்று சர்வதேச மகிழ்ச்சி தினம்!

செவ்வாய் மார்ச் 20, 2018

சர்வதேச மகிழ்ச்சி தினமான இன்று பல பிரபலங்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.சர்வதேச மகிழ்ச்சி தினமானது இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மகிழ்ச்சியாக இருப்பது மனிதர்களின் அடிப்படை உரிமை என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை மையமாக கொண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அது போல் இந்த ஆண்டிற்கான கருப்பொருள், மகிழ்ச்சியை பகிர்வோம்- உறவுகளுக்கிடையேயான அன்பு, இரக்கம் மற்றும் ஒருவருக்கொருவர் உதவுதல் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்பதாகும்.