இன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி!

Tuesday November 14, 2017

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின்  சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 264 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று வவுனியாவில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று(14) காலை வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜையை அடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பேரணியொன்றையும் நடத்தினர்.

இதன் போது, காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், கணவன்மார்களை மீட்பதற்கு  ஜ.நா வில் குரல் கொடுக்கும் சர்வதேச நாடுகளுக்கு நன்றி தெரிவித்தும் , அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் அதிகாரிகளுக்கு வழியுறுத்தினர்.