இன்று வானில் முழு நிலவு 14% பெரியதாக தெரியும்

நவம்பர் 14, 2016

வழக்கமாக மாதம் ஒரு முறை வானில் தோன்றும் பௌர்ணமி முழு நிலா,  இன்று பெரிய அளவில் மிக அருகில் பார்ப்பது போல தோன்றும்.

 70 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி தெரியும் இந்த பெரிய நிலாவை சென்னையிலும் பார்க்க முடியும். பூமியைச் சுற்றி வரும் நிலா 70 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூமிக்கு மிக அருகில் தெரியும். அப்படிப்பட்ட நிகழ்வு இன்று வானில் ஏற்படுகிறது. வழக்கமாக நாம் பார்க்கும் நிலவைவிட இன்று தோன்றும் நிலவு 14 சதவீதம் பெரியதாக நம் கண்களுக்கு தெரியும். 

அதாவது நிலவை அருகில் இருந்து பார்ப்பது போல தோன்றும். வழக்கமான ஒளியை விட 30 சதவீதம் கூடுதலான ஒளியுடன் இன்று இந்த நிலவு தோன்றும். கடந்த 1948ம் ஆண்டு இதுபோன்ற நிகழ்வு வானில் தோன்றியது. அதற்கு பிறகு இன்று இந்த பெரிய நிலா தோன்றுகிறது. 

வானம் தெளிவாக இருந்தால் இதை நாம் பார்க்க முடியும். அதிக ஒளியுடன் இந்த நிலா தெரியும் என்பதால் சிவப்பு நிறத்தில் தோன்றும்.  இதுகுறித்து சென்னையில் உள்ள அறிவியல் நகர இயக்குநர் ஐயம்பெருமாள் கூறியதாவது: 

பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலவு சுற்றி வருகிறது. பூமியில் இருந்து 3 லட்சத்து 56 ஆயிரத்து 40 கிமீ தூரத்தில் நிலவு இருக்கும்.  சில நேரங்களில் பூமியில் இரு்ந்து 4 லட்சத்து 2 ஆயிரத்து 60 கிமீ தூரத்திலும் இருக்கும். தற்போது 3 லட்சத்து 50 ஆயிரம் கிமீ தொலைவில் நிலவு வருகிறது. அதனால் பெரிய அளவில் உள்ளது போல தெரியும். ஆனால் மாதாமாதம் தோன்றும் பௌர்ணமி நிலவுக்கும் இதற்கும் வித்தியாசம் தெரிியாது. இதே நிகழ்வு அடுத்த மாதம் 14ம் திகதியும் தெரியும். இவ்வாறு இயக்குநர் ஐயம்பெருமாள் தெரிவித்தார்.

செய்திகள்