இன அழிப்பை தமது சுயலாப அரசியலுக்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகள்

April 15, 2017

ஈழத் தமிழர்களின் பிரச்சனை என்பது உலக அரசியல், அதனை எந்தவொரு அரசியல் வாதியும் தனது சுய இலாபத்துக்காக தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கின்றான் என நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளார்.

அவர் சினி உலா என்ற ஊடகத்தினால் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்கள் பிரச்சினை என்பது, வெறுமனே ஐந்து பத்து நிமிடங்கள் கதைக்கும் விடயம் அல்ல என்றும், அது பூலோக ரீதியிலான பரந்துபட்ட ஒரு அரசியல் விடயம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறிலங்கா அரசாங்கத்துடன், இந்திய அரசாங்கமும் இணைந்தே இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்றொழித்தது எனவும் குற்றம் சாட்டிய அவர், பல்லாயிரக்கணக்கான போராளிகளை உயிருடன் பிடித்து சித்திரவதை செய்து அவர்களுக்கு இதுவரை என்ன நடந்தென்பது எவருக்குமே தெரியாது எனவும் தெரிவித்த அவர் ஈழத் தமிழர் பிரச்சனை குறித்து எம்மால் ஆதங்கப்படமட்டுமே முடியும் எனவும் தெரிவித்தார்.

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.