இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரின் மனைவி காலமானார்!

திங்கள் நவம்பர் 26, 2018

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மனைவி உடல் நல குறைவால் இன்று அதிகாலை காலமானார். பிரபல திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர் (வயது 84). இவரது மனைவி ராஜம்.  இவர் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவுடன் இருந்துள்ளார்.  இந்த நிலையில், சென்னையில் இன்று அதிகாலை அவர் 4.30 மணியளவில் காலமானார்.

இவருக்கு புஷ்பா கந்தசாமி என்ற மகளும், பிரசன்னா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில வருடங்களுக்கு முன் இயக்குநர் கே. பாலசந்தர் உடல் நல குறைவால் காலமானார்.