இயக்குனர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணம்

June 03, 2017

நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன் உள்ளிட்ட பல படங்களை எடுத்த இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சென்னையில் இன்று(3) நடைபெற்றது.

இந்நிலையில், இயக்குனர் வேலு பிரபாகரன், நடிகை ஷெர்லி தாஸ் திருமணம் சென்னையில் இன்று காலை 10.25 மணியளவில் நடைபெற்றது.  சென்னையில் உள்ள லீ மேஜிக் லேண்டர்ன் திரையரங்கில் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். 
 
மணமகளும், நடிகையுமான ஷெர்லி தாஸ் வேலு பிரபாகரன் இயக்கிய வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகள்