இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்!

செப்டம்பர் 03, 2018

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடிக்கவிருக்கும் கமல்ஹாசனுக்கு, முதல் பாகத்தை போலவே இதிலும் இரட்டை வேடம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1996-ல் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடந்து வருகிறது. இயக்குநர் ‌ஷங்கரும், ஒளிப்பதிவாளர் ரவிவர்மனும் படப்பிடிப்பு தளங்களை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த மாதத்தில் முடிகிறது. எனவே இந்த மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதத்தின் தொடக்கத்தில் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியன்-2 முழு அரசியல் படமாக இருக்கும் என்று ஏற்கனவே அவர் கூறியுள்ளார். முதல் பாகத்தில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எதிர்ப்பதாக கதை இருந்தது. இரண்டாம் பாகம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிரான கதை என்கின்றனர். இதிலும் கமல்ஹாசன் இரு வேடங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் படத்தில் தாத்தா கதாபாத்திரம்தான் படத்தின் வேறாக இருந்தது. முதல் பாகத்தின் முடிவில் இந்தியன் தாத்தா வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று போன் செய்வது போன்று முதல் பாகத்தை முடித்து இருந்தனர். 

இரண்டாம் பாகத்தில் அவர் இந்தியா திரும்புவது போலவும், இங்குள்ள ஊழல் அரசியல்வாதிகளை வர்ம கலையால் வீழ்த்துவதுபோல் திரைக்கதை அமைத்துள்ளனராம். முதல் பாகத்தில் வந்த இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை இரண்டாம் பாகத்தில் மேலும் வயதான தோற்றத்தில் காட்ட ஷங்கர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக வெளிநாட்டு மேக்கப் கலைஞர்களை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர்.

இளம் கமல்ஹாசன் வேடம் முதல் பாகம்போல் வில்லத்தனமாக இருக்காது என்றும், அவரும் ஊழலுக்கு எதிராக போராடுபவர் போலவே வருவார் என்றும் கூறப்படுகிறது. 

செய்திகள்