இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சனத்தொகை கணக்கெடுப்பு!

Wednesday March 14, 2018

இலங்கை  சனத்தொகை கணக்கெடுப்பை இந்த ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவபரத் திணைக்களம் கூறியுள்ளது. 

பொதுவாக வீடுகள் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படுவதுடன், அடுத்த கணக்கெடுப்பு எதிர்வரும் 2021ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட இருந்ததாக அந்த திணைக்களம் கூறியுள்ளது. 

அதற்கு இடைப்பட்ட காலத்தில் அந்த திணைக்களத்திற்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் பல தேவைப்படுவதால், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளதாக தொகை மதிப்பு புள்ளிவபரத் திணைக்களம் கூறியுள்ளது. 

மக்கள்தொகை, வீடுகளின் எண்ணிக்கை, கட்டிடங்களின் எண்ணிக்கை, வீடுகளில் உள்ள நபர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை சேகரிப்பதற்கு இதன்மூலம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வீடுகள் மற்றும் மக்கள் தொகை சம்பந்தமான தகவல்களை குறுகிய கால அடிப்படையில் புதுப்பித்துக் கொள்வது அனர்த்த நிலமைகளின் போது முக்கியமானது என்பதால் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை சனத்தைக கணக்கெடுப்பை மேற்கொள்ள எதிர்பார்ப்பதாக தொகை மதிப்பு புள்ளிவபரத் திணைக்களம் கூறியுள்ளது.