இரண்டு வரவு - செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன!

நவம்பர் 14, 2017

இம்முறை வரவு - செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் போது, இரண்டு வரவு - செலவுத்திட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” என்று, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டுகின்றது.

“இவ்விரு ஆவணங்களில் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அதேவேளை, நிறைவேற்றுவதற்காக வேறொரு வரவு - செலவுத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” என, முன்னணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வ​ரவு - செலவுத் திட்டத்தில், அரச நிறுவனங்கள் விற்கப்படுவது குறித்தோ அல்லது குத்தகைக்கு விடப்படுவது குறித்தோ குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் உண்மையிலேயே, அரச நிறுவனங்கள் பலவற்றைத் தனியாருக்கு விற்பனை செய்யவும் மேலும் சிலவற்றை தனியாரிடம் குத்தகைக்கு விடவும் இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

“அதனால், இந்த வரவு - செலவுத் திட்டத்தினால் நாட்டுக்கு எவ்வித நன்மையும் இல்லை. அதனால், இம்முறை வரவு - செலவுத் திட்டத்தை எமது கட்சி எதிர்க்கும் என, பிமல் ரத்நாயக்க மேலும் கூறினார்.

செய்திகள்
திங்கள் December 11, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக, யாழ்ப்பாணத்தில் இதுவரையில் ஏழு கட்சிகளும்

திங்கள் December 11, 2017

யாழ்ப்பாண நகரிற்கு அண்மையில்  அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயம் மீது  இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த சம்பவம் நேற்று(10)  அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.