இரத்தசோகையை குணமாக்கும் முருங்கை கீரை கடலை உசிலி!

Saturday August 04, 2018

இரத்தசோகை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் முருங்கை கீரையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று முருங்கை கீரை கடலை உசிலி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : 

ஆய்ந்த முருங்கைக்கீரை - ஒரு கப், 
வறுத்த வேர்க்கடலை - கால் கப், 
காய்ந்த மிளகாய் - 5, 
கடுகு, பெருங்காயத்தூள், உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை: 

கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி வைக்கவும். 

வேர்க்கடலையுடன் மிளகாய், உப்பு சேர்த்து மிக்சியில் ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும். 

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். 

அடுத்து அதனுடன் கீரை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வேக விடவும். 

தண்ணீர் வற்றிய பிறகு அரைத்த பொடியை சேர்த்து கிளறி இறக்க முருங்கை கீரை கடலை உசிலி ரெடி.