இராணுவத்தின் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம்!

திங்கள் ஏப்ரல் 16, 2018

இராணுவத்தின் புதிதாக வெளிநாட்டு நடவடிக்கைப் பணியகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கொழும்பு - 3இல் அமைந்துள்ள பழைய டச்சு கட்டடத்தில் கடந்த 12ஆம் திகதி இந்த பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

'அமைதி மாளிகை' (Sama Medura) என்ற பெயரில், இந்தப் பணியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  சர்வதேச அமைதிகாப்பு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கை கடப்பாடுகளை நிறைவேற்றும் செயற்பாடுகளை இந்தப் பணியகம் மேற்கொள்ளவுள்ளது.

பணியகத்தின்  பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மேர்வின் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்காலத்தில், அமைதிகாப்பு படைக்கான படைப்பிரிவுகளை அனுப்புதல், அவர்களுக்கான பயிற்சிகள், செயற்பாடுகளை முன்னெடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை இந்த பணியகமே கையாளவுள்ளது.