இராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபர் கைது!

யூலை 12, 2018

இரத்மலானை - சக்கிந்தாராம பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் மிரிஹானை குற்ற விசாரணை பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். 

அங்குணுகொலபெலஸ்ஸ பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி இரத்மலானை - சக்கிந்தாராம பிரதேசத்தில் இராணுவ வீரரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 31 வயதுடைய ஹோகந்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். குறித்த சந்தேகநபரால் நடத்திச் செல்லப்பட்ட வாகனம் திருத்தும் நிலையத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி ஒன்றும் தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளனர்.

செய்திகள்
திங்கள் யூலை 23, 2018

 பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான நிலையம் தற்போதுள்ள நிலையிலிருந்தே இந்தச் சேவை தொடங்கப்படும் எனவும்,