இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு!

செவ்வாய் ஏப்ரல் 17, 2018

மட்டக்களப்பு -  இருதயபுரம்  பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையொருவர்   நேற்றுமுன்தினம் இரவு  முதல் காணாமல்போயுள்ளதாக  மட்டக்களப்பு காவல் துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தேடப்பட்டுவந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக  காவல் துறையின்  தெரிவித்தனர் .

மட்டக்களப்பு   காவல் துறை  பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த  தங்கவேல் ஜெயராஜ்  (வயது 49) என்ற குடும்பஸ்தரே மட்டக்களப்பு சின்ன உப்போடை  வாவிக்கரை பகுதியில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்தனர்.

குறித்த குடும்பஸ்தர் வாகன சாரதியாக தொழில் புரிபவரெனவும் இரு பிள்ளைகளின் தந்தையெனவும்  உறவினர்கள் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பாக விசாரணைகளை  மட்டக்களப்பு   காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.