இறுதிப் போரில் – 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்!

May 17, 2018

போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்த பின்னர் சிறிலங்கா  படையினரிரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 29 சிறுவர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்று பன்னாட்டு மனித உரிமை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

தென்னாபிரிக்காவை மையமாகக் கொண்ட பன்னாட்டு உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் போரின் கடைசி நாளில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட 280 பேரின் பெயர் விபரங்களை இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் பலரது விபரங்கள் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில், 29 சிறுவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அவர்களில் பலரும் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.