இலங்கைத்தமிழ் பழையமாணவர் ஒன்றியம் நடாத்திய முத்தமிழ் மாலை

Saturday June 23, 2018

பரிசு நகரில் அதுவும் கடந்த 11.06.2018 அன்று திங்கட்கிழமை வேலை நாளில், பொது நோக் கோடு ஒரு கலைவிழா நடாத்தப்பட்டது. தாயகத் தில் உள்ள மாணவர்களின் கல்வித்தேவைக்கு உதவும் பொருட்டு இந்தக்கலை நிகழ்ச்சி நடாத்தப் பட்டது. ஆயிரம் மாணவர்களுக்கு மாதாந்தக் கல்வி உதவித்தொகையினை வழங்கும் செயற் றிட்டத்தை இலக்கு வைத்துச் செயலாற்றி வருகின்றார்கள். எதிர்காலத்தில் ஆயிரம் மாண வர்களின் எண்ணிக்கை பத்தாயிரமாக விரி வாக்கம் செய்யவேண்டும் என்ற கனவோடு உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.