இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கோரி ஜி.கே.வாசன் தலைமையில் உண்ணாவிரதம்!

ஞாயிறு செப்டம்பர் 27, 2015

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்தது.

அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் 4000ற்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர்.

சர்வதேச விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும், கச்சத்தீவில் மீன்பிடிப்பதற்கான உரிமையைப் பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கைகளையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது.

அத்துடன், தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்படுவதற்கும் இதன்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சென்னை, வள்ளுவர்கோட்டம் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.