இலங்கைப் பிரதமரின் இந்திய வருகையை கண்டித்து ஊடகவியலாளர் சந்திப்பு!

திங்கள் செப்டம்பர் 14, 2015

இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் செப் 14,15,16 ஆகிய தேதிகளில் இந்தியப் பயணமாக வருகிறார். இப்பயணத்தின் போது CEPA என்ற பொருளாதார ஒப்பந்தம், இலங்கைக்கு இந்தியாவுக்குமான தரைவழிப் போக்குவரத்து ஆகியவை குறித்து பேச இருப்பதாக அதிகாரப் பூர்வ செய்திகள் வருகின்றன. 

 

இனக்கொலை இலங்கையைப் புறக்கணிக்க வேண்டும். இலங்கையுடனான அரசியல் பொருளாதார உறவுகளைக் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் இப்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமை மன்றக் கூட்டத்தொடரில் இலங்கை மீதான பன்னாட்டுப் பொறுக்கூறல் முறைமையைத் தடுத்தி நிறுத்துவதற்கு இந்தியாவின் ஆதரவைக் கோருவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாக இருக்கிறது. 

 

இலங்கையை ஐ.நா. வில் பாதுகாத்துக் கொண்டு இலங்கை அரசுடன் நட்புறவு பாராட்டி வரும் இந்திய அரசைக் கண்டித்தும் இது குறித்தப் போராட்ட அறிவிப்பை வெளியிடவும் இன்று (14-09-2015) காலை 11 மணி அளவில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்த இருக்கிறது.  அச்சந்திப்புக்கு தங்கள் ஊடகத்தில் இருந்தொரு செய்தி சேகரிப்பாளரை அனுப்பி வைத்து எங்களுடைய செய்தியை மக்களுக்கு கொண்டு சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 


பங்கேற்போர்:

 

தோழர் தியாகு, அமைப்புக் குழு உறுப்பினர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்.
தோழர் பாலன், பொதுச் செயலாளர், சி.பி.எம்.எல்., மக்கள் விடுதலை.
தோழர் தவசிக் குமரன், தலைமைப் பொதுக் குழு உறுப்பினர், திராவிடர் விடுதலைக் கழகம்
தோழர் செந்தில், ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்.
             தோழர் இளையராஜா, தலைவர், தமிழ்நாடு மாணவர் இயக்கம்.
       தோழர் அண்ணாமலை, வடக்கு மண்டல அமைப்பாளர், த.பெ.தி.க.
       தோழர் சுந்தர வடிவேல், தமிழர் விடுதலைக் கழகம்
       தோழர் தமிழ்நேயன், தமிழ்த் தேச மக்கள் கட்சி
       தோழர் சேகர், குமுக தொழிலாளர் இயக்கம்
 
 

               இப்படிக்கு,
               தி.செந்தில் குமார்
 ஒருங்கிணைப்பாளர், இளந்தமிழகம் இயக்கம்,