இலங்கையில் திட்டமிடப்பட்ட இன அழிப்பு - ஐ.நாவில் தர்சிக்கா!

செவ்வாய் செப்டம்பர் 15, 2015

இலங்கையில் திட்டமிட்ட இனவழிப்பு இடம்பெற்றுள்ளதாக சுவிஸ் நாடாளுமன்றத் தேர்தலில் சோசலிச ஜனநாயகக் கட்சியின் சார்பில் பேர்ண் மாநிலத்தில் போட்டியிடும் திருமதி தர்சிக்கா கிருஸ்ணானந்தம் வடிவேல் குறிப்பிட்டார்.

 

இன்று ஐ.நா பிரதான மண்டபத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இலங்கையில் அனைத்து விதமான உள்நாட்டு விசாரணையும் முழுமையாக தோல்வியடைந்துள்ள நிலையில் நீதிக்காக மீண்டும் காத்திருக்க வேண்டியுள்ளது.

 

இப்போதும் கூட தமிழ் மனித உரிமை ஆர்வலர்களும் அரசியல்வாதிகளும் இலங்கை இராணுவத்தால் துன்புறுத்தப்படுகின்றனர்.

 

ஆனால் இந்தச் சிக்கல்களை முழுமையாக தீர்க்கும் பணியில் ஐக்கிய நாடுகள் மன்றம் முழுமையாக தோல்வி கண்டுள்ளது.

 

அரசியல் குறுக்கீடு இல்லாத சுதந்திரமான ஒரு சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அவர் மேலும் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

 

தர்சிகா கிருஸ்னனந்தன் அவர்கள் சுவிஸ் ஈழத்தமிழரவையில் அங்கம் வகிப்பதுடன் தொடர்ச்சியாக தமிழினப்படுகொலைக்கு எதிராக குரல்கொடுப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.