இலங்கை போர்க் குற்றவாளிகள் கனடாவுக்குள் அனுமதி?

நவம்பர் 16, 2017

கனடாவின் வன்கூவர் நகரில் விரைவில் நடைபெறவூள்ள 2017ம் ஆண்டுக்கான சமாதான பாதுகாப்பு அமைச்சரவை மாநாடு தொடர்பில் கனடிய  மத்திய அரசின் எதிர்க்கட்சியில் வெளிவிவகாரங்களுக்கான நிழல் பிரதியமைச்சராக விளங்கும் கௌரவ கானெட் ஜேனஸ் (Garnett Genuis MP) அவர்கள் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளார்:

“தமிழ் சமூகத்தின் பல பிரதிநிதிகளை நான் சந்தித்து உரையாடியதிலிருந்து இலங்கைல் போர்க்குற்றங்களைப் புரிந்துள்ள சிலர் விரைவில் கனடாவூக்குள் அனுமதிக்கப்பட உள்ளதாக அறிந்து கவலையடைகிறேன். அண்மையில் கொன்சவ்வேட்டிவ் கட்சி ‘சேர்க்கி மக்நிற்ஸ்க்கி சட்டம்’ அதாவது வெளிநாடுகளில் தவறிழைத்த அரச பிரதிநிதிகளால் பாதிப்படைந்தோருக்கு நீதி வழங்கும் சட்டமூலத்தை அறிமுகம் செய்தது. இந்த முக்கியமான கொன்சவ்வேட்டிவ் கட்சியின் சட்டமூலத்திற்கமைய  மிக மோசமான மனித உரிமை மீறல்களைப் புரிந்த வெளிநாட்டு அரச பிரதிநிதிகளையூம் அதிகாரிகளையூம் கனடிய அரசாங்கம் தடை செய்வதற்கான உரிமை வழங்கப்பட்டுள்ளது. ரஸ்யாவில் மிக மோசமாகத் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சேர்க்கி மக்நிற்ஸ்க்கி பெயரில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டாலும்  இந்த சட்டமூலம் உலகின் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

எனவே  விரைவில் நடைபெறவூள்ள 2017ம் ஆண்டுக்கான சமாதான பாதுகாப்பு அமைச்சரவை மாநாட்டிற்கு வருகைதரத் திட்டமிட்டுள்ளோரின் தரவூகளை  கனடிய அரசு முழுமையாக ஆராய்ந்து  அவர்களில் யாராவது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டில் ஈடுபட்டிருக்கக்கூடிய வாய்ப்புகளை கவனத்தில் எடுத்து  அப்படியானோர் மீது மக்நிற்ஸ்க்கி சட்டமூலத்தை சரியாகப் பயன்படுத்துமென நான் எதிர்பார்க்கிறேன்-நம்புகிறேன்.

ஏற்கனவே கனடிய அரசு  இத்தகைய சட்டமூலத்தைப் பாவித்து ரஸ்யா  வெனசுவேலா  தென்-சூடான் போன்ற நாடுகளிலிருந்து வருகை தரவிருந்த சில மனித உரிமை குற்றச்செயல் புரிந்தோரை தடைசெய்தமை வரவேற்கத்தக்க விடயமாக இருந்தாலும்  இன்னும் அதிகம் இந்த சட்டமூலம் தொடர்பில் கனடிய அரசு கவனம் செலுத்தவேண்டுமென்று நான் நம்புகிறேன். இந்த சட்டமூலத்தினுள் அகப்படாது தப்பிக்கொண்டோரில் முன்னாள் ரஸ்ய மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரி திரு.லிற்விநெக்கோவைப் படுகொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் டிமிற்றி கொவ்டுன் மற்றும் அந்ரேய் லுகொவொய் ஆகியோரும் அடங்குவர்.

 கொன்சவ்வேட்டிவ் கட்சியால் கொண்டுவரப்பட்ட மக்நிற்ஸ்க்கி சட்டமூலத்தின் கீழ்  உரிய சட்டங்களை மீறுகின்ற அனைத்து உறுப்பினர்களும் தடைசெய்யப்பட வேண்டுமென்பதே எங்களது நிலைப்பாடு. சிறீலங்காவில் அடிப்படை மனித உரிமை  நீதி  நல்லிணக்கம் போன்றவை சரியாக நிலைநிறுத்தப்பட  கொன்சவ்வேட்டிவ் கட்சி தொடர்ந்தும் குரல்கொடுக்கும்.”

செய்திகள்