இலண்டனில் வீரத்தமிழ்மகன் முருகதாசன், முத்துக்குமார் ஆகிய தற்கொடையாளர்களின் நினைவுகூரல்

ஞாயிறு பெப்ரவரி 28, 2016

தமிழீழத்தில் நிரந்தரப் போர்நிறுத்தத்தை வலியுறுத்தித் தீக்குளித்துத் தம்மைத் தற்கொடையாக்கிய வீரத்தமிழ்மகன் முருகதாசன், முத்துக்குமார் ஆகிய தற்கொடையாளர்களின் 7ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு இலண்டனில் எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வடமேற்கு இலண்டன் கொலின்டேல் கோட்டத்தில் நடைபெற்ற நினைவுகூரல் நிகழ்வில் பிரித்தானியாவாழ் தமிழீழ உறவுகள் பங்கேற்றுத் தற்கொடையாளர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.