இளம் வயது மாரடைப்புக்கு காரணங்கள்!

புதன் ஜூன் 27, 2018

இதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்கள்.

இதய நோய் உண்டாகுவதற்கு உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகையிலை பொருட்கள் பயன்பாடு ஆகியவை முக்கிய காரணங்கள். ரத்த அழுத்தமும், உடல் பருமன் பிரச்சினையும் பலரை பாதித்துள்ளது. கெட்ட கொழுப்பு உடலில் சேரும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அது இதயத்தை பலவீனப்படுத்துகிறது. 

உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதும் ரத்த அழுத்தம் அதிகரிக்க காரணமாகிவிடுகிறது. இறுதியில் இதய செயலிழப்பு ஏற்படுகிறது. தினமும் 2.3 கிராம் சோடியம்தான் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நாம் இரண்டு மடங்குக்கு அதிகமான உப்பை உணவில் பயன்படுத்துகிறோம். சமீபகாலமாக இதய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 17 மில்லியன் மக்கள் இதய நோய் பாதிப்புக்குள்ளாகி மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை 2030-ம் ஆண்டில் 23 மில்லியன் ஆக உயரும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 25 சதவீதம் பேர் 40 வயதுக்குள்ளாகவே மாரடைப்புக்கு ஆளாகிறார்கள்.