இளையராஜாவின் இசையை மருந்தாக்க மருத்துவர்கள் முயற்சி!

சனி ஓகஸ்ட் 04, 2018

இந்திய சினமாவில் இசைஞானி என்று போற்றப்படும் இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியில் சிங்கப்பூர் மருத்துவமனை மேற்கொண்டுள்ளது.

இசைஞானி என்று போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார்.

அவரது இசைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இளையராஜாவின் இசையை மருத்துவத்துக்குப் பயன்படுத்தும் முயற்சியை சிங்கப்பூரில் உள்ள பிரபல மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை கையில் எடுத்திருக்கிறது.

அவருடைய ஆல்பங்கள், சில திரைப்படப் பாடல்கள் பற்றி விரிவாக ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கின்றது. சில இசைக்கோப்புகளை பிரத்யேகமாக இந்தத் தொகுப்புக்காக உருவாக்கி கொடுத்திருக்கிறார் இசைஞானி.