இளையராஜாவை வைத்து இசை திருவிழா!

புதன் செப்டம்பர் 19, 2018

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் இளையராஜாவுடன் இணைந்து இசை ராஜா 75 என்று இசை திருவிழா நடத்த இருக்கிறார்கள். இசைஞானி என்று பலராலும் போற்றப்படும் இசை அமைப்பாளர் இளையராஜா. இவர் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார். இவருடைய இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே சொல்லலாம். அந்தளவிற்கு இவரது இசைக்கு பலரும் அடிமையாகி இருக்கிறார்கள்.

இந்நிலையில், இளையராஜாவை வைத்து ‘இசைராஜா - 75’ என்ற இசை திருவிழா நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. தயாரிப்பாளர்கள் நலனுக்காக நடத்தும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சிக்காக இளையராஜாவுடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த பிரமாண்டமான இசை திருவிழா அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடக்க இருக்கிறது.