இஸ்ரேலில் 2,700 ஆண்டுகள் பழமையான கவர்னர் முத்திரை கண்டுபிடிப்பு!

Monday January 01, 2018

இஸ்ரேலில் 2,700 ஆண்டுகள் பழமையான கவர்னர் முத்திரையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இஸ்ரேல் நாட்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் 2,700 ஆண்டுகளுக்கு முன்னர் பழைய ஜெருசலேம் நகர கவர்னர் பயன்படுத்திய முத்திரை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறிய நாணயம் வடிவில் இருக்கும் முத்திரையின் இரு பக்கத்திலும் இரண்டு பேரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 

இந்த முத்திரைகள் கவர்னரின் சார்பாக வேறு நாடுகளுக்கு செல்லும் போது அடையாளமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இதை பயன்படுத்தி வெளிநாடுகளில் வர்த்தகத்திலும் மக்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கிடைத்துள்ள இந்த முத்திரை பைபிலில் குறிப்பிட்டுள்ளது போல 2,700 ஆண்டுகளுக்கு முன் ஜெருசேலம் நகர் கவர்னரால் ஆளப்பட்டதை உறுதிப்படுத்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.