ஈகையர் வணக்க நிகழ்வு தென்மேற்கு லண்டன்!

February 19, 2018

தீயில் கருவான வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் ஈகைப்பேரொளி முருகதாசன் ஈகைப்பேரொளி செந்தில்குமரன் உட்பட 25 வீரத்தமிழ்மகன்களும் தியாகச்சுடர் வீரமங்கை செங்கொடிக்குமான ஈகையர் வணக்க நிகழ்வு தென்மேற்கு லண்டன் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் நினைவு கூறப்பட்டது .

நிகழ்வானது தூய்மை, தியாகம் , உறுதி , வீரம் என்பவற்றை வெளிப்படுத்தும் நான்கு வண்ணங்களைக் கொண்ட தமிழீழத் தேசியக்கொடியேற்றலோடு ஆரம்பமானது . தமிழீழ தேசிய கொடியினை தென் மேற்கு லண்டன் மகளிர் பொறுப்பாளர் தர்ஷிகா ஸ்ரீசிவகுமார் அவர்கள் ஏற்றி வைத்தார் . ஈகைச்சுடரினை மாவீரர் விந்தனின் சகோதரன் திரு மகேந்திரன் ஏற்றி வைத்தார் .

திருஉருவத்திற்க்கான மலர் மாலையினை ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் தாயார் அணிவித்து அஞ்சலி செலுத்த அவரை தொடர்ந்து பொது மக்கள் மலர் வணக்கம் சுடர்வணக்கம் செலுத்தினார்கள் . எழுச்சி நடனங்களை செல்வி சகி மகாலிங்கம் மற்றும் வடபோர்ட் தமிழ் கல்விக்கூடம் ஆசிரியர் சண்முகப்பிரியாவின் மாணவர்களும் வழங்கினார்கள் ஈகையர் நினைவு சுமந்த கவிதையை திரு வேல்தர்மா திரு தாஸ் மற்றும் வடபோர்ட் கல்விக்கூட மாணவர் சாய்குகணேசன் வழங்கினார்கள் . 

எழுச்சி கானங்களை  மயூரன் சதானந்தன் அவர்கள் வழங்கினார்கள் . ஈகை கொடையாளர்கள் நினைவு சுமந்த சிற்றுரையை மாவீரர் விந்தனின் சகோதரன்  மகேந்திரன் வழங்கினார்கள். தொடர்ந்து அரசியல் கலந்துரையாடலை திரு சதா மற்றும்  செல்வகுமரன் ஆகியோர் பொதுமக்களோடு சேர்ந்து நடத்தினார்கள் . இறுதியாக தமிழீழ தேசியக் கொடி கையேந்தலுடன் தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்து பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நினைவு வணக்கம் நிறைவு பெற்றது.

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....