ஈராக்கில் கடத்தப்பட்டார் பெண் பத்திரிகையாளர்!

வியாழன் டிசம்பர் 29, 2016

ஈராக்கின் பக்தாத் நகரிலிருந்து மூத்தப் பெண் பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டுள்ளார்.  சம்பவம் குறித்து ஈராக் உள்த்துறைஅமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் அஹ்ப்ரா அல் குவைசி எனும் மூத்தப் பெண் பத்திரிகையாளர் திங்கட்கிழமை இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாதவர்களால் கடத்தப்பட்டுள்ளதாக ஈராக் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று தகவல் பகிர்ந்துள்ளது.

ஈராக்கில் நிலவிவந்த தீவிரவாத நடவடிக்கைள் மற்றும் அரசியல் ஊழல்களை விமர்சித்து வந்துள்ள அஹ்ப்ரா, அரச கலாச்சாரத்துறையின் பணியாளராகவும் கடமையாற்றியுள்ளார். அவரின் கடத்தல் தொடர்பான விசாரனைகளை தொடங்குமாறு ஈராக் பிரதமர் ஹைதர் அல் பாக்தாதி தெரிவித்துள்ளதாக ஈராக் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 

உலகில் ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தலான நாடுகளின் பட்டியலில் ஈராக்கும் அடங்கும். இந்நிலையிலேயே குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.